தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதிலிருந்து தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவ்வப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அவர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது
தென்மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.