5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வருகை

புதன், 25 ஆகஸ்ட் 2021 (14:34 IST)
புனேயில் இருந்து இன்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்தனர். 
 
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்ககியதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. 
 
இதனால் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கு இந்த மாதம் அரசு மருத்துவமனைகள், முகாம்களில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசிடம் இருந்து 57,86,340 தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி புனேயில் இருந்து இன்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன. அவை மாநில தொகுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படுகிறது.
 
மத்திய தொகுப்பில் இருந்து படிப்படியாக தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு குறைந்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்