தமிழகத்தில் 5 மாவட்டங்கள் 100 % தடுப்பூசி - எந்த மாவட்டங்கள் தெரியுமா?

சனி, 26 மார்ச் 2022 (09:03 IST)
இன்று 26 வது கொரோனா தடுப்பூசி முகாமை துவங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

 
தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று 40-க்கும் உள்ளாகவே தமிழகம் முழுவதும் பாதிப்பு இருந்தது என்பதும் தெரிந்ததே. கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 
 
இதுவரை 25 வாரங்கள் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக அரசு நடத்திய நிலையில் இன்று இருபத்தி ஆறாவது மெகா நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா  வைரஸ் தடுப்பூசி மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாதவர்கள் இன்று செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இன்று ஆலந்தூரில் தடுப்பூசி முகாமை துவங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் 55,30,900 பேரில் 99% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். கடலூர், கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்களில் 100 % கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்