தருமபுரி மாவட்டம் கோட்டம்பட்டியில் உள்ள தனியார் கோழிப் பண்ணையில் மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில், 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாக மழைபெய்து வரும் நிலையில், தர்ம்பரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் பெய்த மழையின்போது, மின்னல் தாக்கியதில், சிட்டிலிங் அடுத்த மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தீப்பிடித்தது.
மின்னல் தாக்கி திடீரென்று தீப்பிடித்ததில், இந்த தி கோழிப்பண்ணை முழுவதும் பரவியது. இதில், கோழிப்பண்ணையில் இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும், 250 மூட்டை கோழித்தீவனமும் எரிந்து நாசமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கும் கொழி பண்ணை முழுவதும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.