ஆர்கே நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள்: அதிர்ச்சியில் திமுக!

வியாழன், 6 ஏப்ரல் 2017 (11:11 IST)
ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்கே நகர் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அவரது இடத்தை நிரப்ப அதிமுகவின் இரு அணிகளும் ஆர்கே நகரில் மல்லுக்கட்டுகின்றன.


 
 
இதில் அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் தரப்பினர் மீது பல்வேறு புகார்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்தவண்னம் உள்ளன. பண விநியோகம் தான் இவர்கள் மீது வைக்கப்பட்டுவந்த முக்கியமான குற்றச்சாட்டு. அதிகாரிகளின் துணையோடு விதிமுறைகளை மீறி வருகிறார் தினகரன் என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் திருச்சி சிவா நேற்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், ஆர்கே நகர் தொகுதி வேட்பாளர் பட்டியலில், இறந்து போனவர்கள், வெளியூர்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களின் பெயர்களை சேர்த்துள்ளானர் என குறிப்பிட்டுள்ளனர்.
 
ஆர்கே நகர் தொகுதி தேர்தலின் உன்மையான வாக்காளர்களின் பட்டியலை வெளிப்படையாக அனைத்து கட்சியினருக்கும் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அந்த மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியதாக திருச்சி சிவா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்