இந்நிலையில் சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து அதிக பயணிகளுடன் திருமால்பூருக்கு சென்று கொண்டிருந்த ரயில், பரங்கிமலையை நெருங்கிய போது, படிகட்டில் தொங்கிய 4 மாணவர்கள் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்தனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். பலர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.