கையை அடித்து உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்; வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய கமிஷனர்

திங்கள், 23 ஜூலை 2018 (15:51 IST)
சென்னையில் சப்-இன்ஸ்பெக்டரால் கை உடைக்கப்பட்ட வாலிபரை வீடு தேடிச் சென்று கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல் கூறியுள்ளார்.

 
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முகமது ஆரூண் சேட் என்ற கல்லூரி மாணவர் கடந்த 19ஆம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஈகா திரையரங்கம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் அவரது வாகனத்தை மடக்கியுள்ளார்.
 
ஆவனங்களை காண்பிக்க கூறியுள்ளார். முகமது ஆரூண் சேட் ஆவனங்களின் நகல்களை காண்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் அசல் ஆவனங்களை கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
இதில் சப்-இன்ஸ்பெக்டர், முகமதுவை லத்தியால் தாக்கி கையை உடைத்துள்ளார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட வாலிபரை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்