ஆதார் இருந்தால் இந்தியராகி விட முடியுமா? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

ஞாயிறு, 22 ஜூலை 2018 (13:44 IST)
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிடவை இருந்தாலும் அவரை இந்தியக் குடியுரிமை பெற்றவராக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 
கடந்த ஜூலை 1ஆம் தேதி ஜெயந்தியை என்பவரை சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். 
 
இதைத்தொடர்ந்து ஜெய்ந்தியின் மகள் திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இலங்கையில் பிறந்த ஜெயந்தி அங்கு நடைபெற்ற போரினால் இந்தியா வந்து, தமிழகத்தில் பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டவர் என்றும் திருமணத்துக்குப் பின் இந்தியாவிலேயே வசித்து வருகிறார் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
 
ஜெயந்தி இந்தியர் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் இருந்தபோதும், அவர் கைது செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. 
 
ஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் 1994ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது என்றும் பின் அவர் சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் பெற்றதாக மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருவருக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை இருந்தாலே அவரை இந்தியக் குடியுரிமை பெற்றவராக கருத முடியாது. என்று தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அனைத்தும் அங்கீகரித்தால்தான் இந்தியக் குடியுரிமை பெற்றவராக ஏற்க முடியும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்