லாரிகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் போதிலும், மக்கள் பலர் சட்டத்தை மதிக்காமல் லாரிகளில் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு, சிலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
மினி லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. மினி லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி அமுதா, ஜீவா, கலியம்மாள், தமிழரசன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஜீவா தனியார் கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இடிபாடுகளில் சிக்கிய 26 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.