இந்த நிலையில் தமிழ் அல்லாத மொழியை விருப்ப பாடமாக எடுத்து பயின்று வருபவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 35 மார்க் கண்டிப்பாக எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ் கற்றல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இனி உருது, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட விருப்ப பாடங்களை எடுத்துள்ள மாணவர்கள் கண்டிப்பாக 35 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த மதிப்பெண்களும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.