தமிழக மீனவர்கள் 32 பேர் கைது.! மத்திய - மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!!

Senthil Velan

வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (12:26 IST)
தமிழக மீனவர்கள் 32-பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில விடியா திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் கூறியுள்ளார்.
 
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ: மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன்.. சாட்சியங்களை கலைக்கக்கூடாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.!!
 
மேலும், மாநிலத்தில் ஆட்சியையும் நாற்பது எம்பிக்களை வைத்துக்கொண்டு வழக்கம் போல கும்பகர்ண தூக்கத்தில் இல்லாமல், இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்