10 வயது சிறுமி பலாத்காரம்; 3 பேருக்கு தூக்கு: மகிளா நீதிமன்றம் அதிரடி

வியாழன், 4 அக்டோபர் 2018 (15:45 IST)
தேனி மாவட்டம் பெரியகுளம் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேனி மாவட்ட மகிளா நீதிமன்றன் மூவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு 10 வயது சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியை தேடிய பெற்றோர் சிறுமி கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில், சிறுமி கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 
 
பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிட குற்றவாளிகளாக மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
 
இதையடுத்து மூன்று பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இந்த மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மூவரும் தலா 50000 ரூபாய் அபராதமும், சிறுமியின் தாயாருக்கு கருணை தொகை வழங்கவும் உத்தவிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்