திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சனி, 9 ஜூலை 2016 (10:05 IST)
வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு 3சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திருநங்கைகள் சிலர் மனுத் தாக்கல் செய்தனர்.
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில், தமிழகத்தில் 3328 திருநங்களுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மற்ற பலருக்கும் வழங்கவில்லை. அவர்கள் மிகவும் பரிதாபமாக உள்ளனர்.
 
அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கினால் தான் அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்றார்.
 
மேலும், அரசு தரப்பில் சில தகவல்கள் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக சமூக நலத்துறை பரிசீலனை செய்து 6 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்