சேலத்தில் தனியார் பேருந்து மோதி 3 பேர் பலி – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ?

ஞாயிறு, 17 நவம்பர் 2019 (14:10 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தனியார் பேருந்துகளால் அதிகமான விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சேலம் மாவட்டம் வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. இவரும் இவரது மகள் நித்யாவும் சக்திவேல் என்ற மகனும் இன்று காலை தங்கள் இருசக்கரவாகனத்தில் கெங்கவல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். விபத்து நிகழ்ந்ததை அடுத்து அந்த பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை அங்கெயே நிறுத்து விட்டு ஓடியுள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் தனியார் பேருந்துகள் கட்டற்ற வேகத்தில் இதுபோல செல்வதால் அதிகமான விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனது மாவட்டத்தில் இதுபோல அதிகமாக நடக்கும் விபத்துகளுக்கு முதலவர் எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்