என்னது காந்தி விபத்தில் இறந்தாரா? ஒடிசா அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 15 நவம்பர் 2019 (22:05 IST)
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி "நமது தேசப்பிதா; ஒரு பார்வை" என்ற தலைப்பில், ஒடிசா அரசு கைப்பிரதி ஒன்றை வெளியிட்டது. இந்த கைப்பிரதியில் காந்தி சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
 
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி "நமது தேசப்பிதா; ஒரு பார்வை" என்ற தலைப்பில் ஒடிசா அரசு அளித்த கைப்பிரதியை வாங்கி படித்த பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் அதில் இருந்த காந்தியின் மரணத்திற்கான காரணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
 
மகாத்மா காந்தியை கோட்சேதான் சுட்டுக்கொலை செய்தார் என்பது உலகமே அறிந்த நிலையில் ஒடிசா அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிரதியில் அவர் விபத்தில் இறந்தார் என குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
 
இந்த நிலையில் காந்தி மரணம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து இடம்பெற்ற கைப்பிரதிகள் திரும்பப்பெறப்படும் என்றும், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒடிசா அரசு உறுதியளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்