இந்த நிலையில், நாகராஜ் வீடு அருகில் அவரது உறவினர் சுதன் என்பவரின் மகன் கபிசாந்த் (4) மற்றும் நித்திஷ் , நித்திஷா ஆகியோர், நாகராஜரின் அண்ணன் மணிகண்டன் கார் நிறுத்தியிருந்ததற்கு அருகில் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின், 3 பேரும் ககருகுள் விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமான கார் கதவு பூட்டியது.
கார் கதவைத் திறக்க முடியாமல் குழந்தைகள் 3 பேரரும் மூச்சுவிடமுடியாமல் சிரமப்பட்டனர். இதனால் 3 பேரும் காருக்குள் மயங்கி விழுந்தனர். அவர்களை தேடிய பெற்றோர் காரின் கதவைத் திறந்தனர்.அவர்கள் பேச்சு மூச்சின்றி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸில் பணகுடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், 3 குழந்தைகளைப் பரிசோதித்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.