சென்னையில் இருந்து பேருந்துகளில் 3,62,000 பேரும், ரயில்களில் 12 லட்சம் பேரும் பயணம்!

சனி, 11 நவம்பர் 2023 (16:02 IST)
தமிழகத்தில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி பண்டிகை. இப்பண்டிகைக்கு மக்கள் தங்கல் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவர்.

அதன்படி அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் இந்த தீபாவளியை கொண்டாட அவரவர் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர். இதற்கான பேருந்து ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் இருந்து பயணிகள் வெளியூர் செல்ல  கூடுதல் பேருந்துகள் இயக்கியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தன் வலைதள பக்கத்தில்,

‘’தீபாவளியை முன்னிட்டு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி  மு.க.ஸ்டாலின்  அவர்கள் உத்தரவிட்டதன்படி,

பூந்தமல்லி புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டதில்,

கடந்த இரண்டு நாட்களில்,நேற்று இரவு 12 மணி வரை 3,62,000 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 5 மணி வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசில் மக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர்’’என்று தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் இருந்து ரயில்களில் கடந்த வியாழன், வெள்ளி மற்றும் இன்று என 3 நாட்களில் மட்டும் 12 லட்சம் பயணிகள் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகிறது.

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் உத்தரவிட்டதன்படி,
பூந்தமல்லி புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டதில்,
கடந்த இரண்டு நாட்களில்,நேற்று இரவு 12 மணி வரை 3,62,000… pic.twitter.com/LHySGPDPxi

— Sivasankar SS (@sivasankar1ss) November 11, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்