21 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி
சனி, 7 ஏப்ரல் 2018 (07:24 IST)
தமிழகம் முழுவதும், 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.
ஆனால் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்களின் சார்பில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த வழக்குகளை விசாரணை செய்து வரும் நீதிமன்றம் தேர்தல் குறித்து எழுந்துள்ள புகார்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஒரு வார்த்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்குகளை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் 21 கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை ரத்து செய்தது தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சற்றுமுன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கான மறுதேர்தல் அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது