14-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலோரங்களில் கண்ணீர் மல்க அஞ்சலி!

புதன், 26 டிசம்பர் 2018 (11:08 IST)
மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினத்தையொட்டி, கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். 


 
கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழக கடலோரப் பகுதியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சென்னையின் கடலோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கோர நிகழ்வின் 14 -வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
 
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை உருவாகி கடற்கரையில் இருந்த மக்களை கடலுக்குள் இழுத்து சென்ற துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த பேரழிவில் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் பெரும் உயிர் இழப்பை சந்தித்தது. 14 நாடுகளை சேர்ந்த 2,30,000 பேர் இந்த சுனாமியால் உயிரிழந்தனர்.
 
மேலும் , இந்தியாவில் தமிழகம் கடும் உயிரிழப்பை சந்தித்தது. கடற்கரையோரங்களில் குவிந்த சடலங்களை ஒரே குழியில் புதைக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்த கோர சம்பவம் இன்று வரை நம் அனைவரது மனைதிலும் நீங்காத ரனமாகவே உள்ளது. 


 
அந்த கோரத்தாண்டவத்தை நினைவூட்டும் விதமாக இன்று 14வது சுனாமி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அவரது குடும்பத்தினர்கள் நினைவிடத்திலும், கடற்கரை பகுதிகளிலும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்