14 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: எல்லை தாண்டியதாக குற்றச்சாட்டு!

வியாழன், 25 மார்ச் 2021 (08:31 IST)
தமிழக மீனவர்கள் அவ்வப்போது எல்லை தாண்டுவதாக குற்றஞ்சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இது குறித்து மத்திய அரசும் அவ்வப்போது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்துள்ளதாக தெரிகிறது. இதில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 14 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்