சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அந்த நாட்களுக்கு முந்தைய நாள் காய்கறிகள், மளிகைப்பொருட்களை வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்து சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர்.. குறிப்பாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்காக சுமார் 50ஆயிரம் பேர் கூடியதாகவும், தனிமனித இடைவெளி, சமூக விலகல், மாஸ்க் அணிதல் ஆகிய அரசின் அறிவுரை காற்றில் பறக்கவிடப்பட்டதால் ஒருவாரம் கழித்து இதன் அபாயம் தெரியும் என்று கூறப்பட்டது
சென்னையில் 52 பேர், கடலூரில் 17 பேர், அரியலூரில் 22 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், விழுப்புரத்தில் 20 பேர், பெரம்பலூரில் ஒருவர் என கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 131 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது