இன்று செய்தியாளர்களை சந்தித்த கேபி ராமலிங்கம் கர்நாடகா அரசு மேகதாது கோவில் அணை கட்ட 3 குழுக்களை அமைத்துள்ளது. ஆனால் அது பற்றி கவலை கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று உள்ளார். தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்பவர்கள் கொடுத்த வரவேற்பை அவர் ஏற்று உள்ளார். மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து விடுமோ என்ற சந்தேகமும் இதனால் ஏற்படுகிறது.