புதுச்சேரி மாநிலத்தில் +2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் என்ன?

திங்கள், 20 ஜூன் 2022 (11:04 IST)
புதுச்சேரி மாநிலத்தில் +2 பொதுத்தேர்வில் 96.13% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

 
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
 
இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.06 லட்சம் மாணவ, மாணவிகளில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 93.76 சதவீதமாக உள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் +2 பொதுத்தேர்வில் 96.13% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் 91.96% அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்