அப்போது, சர்வீஸ் சாலை குண்டும் குழியுமான இருந்ததால், பள்ளத்தைத் தவிர்க்க ஷோபனா முயன்றபோது, முந்திச் செல்ல முயன்ற வேன் ஒன்று இவரது வாகனம் மீது மோதியதில், ஷோபனா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பின்னார் வந்த லாரி மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கி சோபனா(20) பலியானார்.
இந்த விவகாரத்தில் பார்த்திபன், மோகன் ஆகிய 2 ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மோசமான சாலையால் எங்கள் ஊழியரை இழந்துவிட்டதாக பெண் இன்ஜினியர் பணியாற்றிய நிறுவனத்தின் சி இ ஓ ஸ்ரீவேம்பு தெரிவித்துள்ளார்.