இது குறித்து போலீஸார் மாணவி வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது மணிமாலா எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு சரவணன்தான் காரணம் என்று எழுதிவைத்திருந்தார். மாணவி குறிப்பிட்டிருந்த சரவணன் என்பவர் பழனிவேலுவின் தங்கை கணவர். விருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் விசாரணையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மணிமாலாவை சந்திக்க வந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தார். மேலும் அதனை செல்போனில் படம் பிடித்தார். இதைத்தொடர்ந்து செல்போனில் படம்பிடித்த காட்சிகளை காட்டி, வெளியே சொன்னால் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் மணிமாலாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மணிமாலாவை பரிசோதித்த மருத்துவர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். தனது தங்கையின் கணவரை எப்படி புகார் கொடுப்பது என்ற வேதனையில் பழனிவேல் இருந்துள்ளார். இந்த சூழ் நிலையில் மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.