10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (18:54 IST)
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சமீபத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை வெளியாகும் முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான dge.tn.gov.in என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதின்றாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடுவுகள் வரும் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.