பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளிவந்துள்ள ஆடியோ ஒன்றினை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி கல்வித்துறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தகவல்கள் தேவை என கல்லூரி நிர்வாகம் ஒன்று கேட்டது போலவும் அதற்கு புரோக்கர் ஒருவர் பதில் கூறுவது போன்ற ஆடியோ இணையதளங்களில் வைரலாய் வருகிறது.
ஒரு மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தகவல்கள் 3000 ரூபாய்க்கும், ஒரு மாவட்டத்தின் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தகவல்கள் 5000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது