துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.