நர்சரி பள்ளிகளை திறக்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்தியது அரசு!

சனி, 12 பிப்ரவரி 2022 (16:03 IST)
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

 
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோன ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
1. தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
 
2. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.
 
3. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
 
4. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
 
5. நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.
 
6. பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.
 
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்