100 நாள் திட்டம்... அறநிலையத்துறை அமைச்சரின் அதிரடிப் பேச்சு....

திங்கள், 7 ஜூன் 2021 (15:57 IST)
தமிழகத்தில்  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை 100 நாளில்  செயல்படுத்துவோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது.

எதிர்கட்சியினர் குற்றச்சாட்டுகள் வைப்பதற்கே இடம்கொடுக்கக்கூடாது என்ற வகையில் முதல்வர் ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிறப்புடன் உள்ளதாக விமர்சனகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் தி இந்து பத்திரிக்கை குழுமத்தலைவர் ராம் அவர்கள் ஸ்டாலினிக்கு 100 மதிப்பெண் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.  இன்றுடன் ஸ்டாலின் பதியேற்றி 100 நாட்கள் ஆகிறது.

இந்நிலையில், தமிழகத்தில்  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை 100 நாளில்  செயல்படுத்துவோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

 மேலும்,  யார் தடுத்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என அமைச்சர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்