மந்திர உச்சரிப்பு முறைகளும் அதன் பலன்களும் !!

ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபிக்கும்போதும் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலையின்றி ஜெபிக்கும்போதும் மூன்றுவகையான மந்திர ஜெபமுறைகள்  கூறப்பட்டுள்ளன.

மனதிற்குள் மந்திரத்தை ஜெபிப்பது மானஸம். தனக்கு மட்டும் கேட்கும்வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தம். பிறர் அறிய உச்சரிப்பது வாசகம் மனதிற்குள் உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பது மத்திமம் பிறர் அறிய உச்சரிப்பது அதமம்.
 
எந்த மந்திரத்தை ஓதினால் என்ன பலன் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. உலக இன்பத்தை மட்டும் துய்க்க வேண்டுமென  விரும்புகிறவர்கள் நமசிவாய மந்திரத்தை ஓதலாம்.
 
உலக இன்பத்தோடு இறையருளும் கிட்டவேண்டுமென எண்ணுபவர்கள் சிவாய நம என்னும் மந்திரத்தை ஓதலாம். மும்மலங்களை அறுத்து இறைவனின் திருவடியிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்கள் சிவாயசிவ என்னும் ஐந்தெழுத்தை ஓதலாம்.
 
மும்மலங்களை அறுத்த பின்பும் தொடரும் வாசனா மலத்தையும் போக்கவேண்டுமென எண்ணுபவர்கள் சிவசிவ மந்திரத்தை ஓதலாம். பெற்ற திருவடிப்பேறு எக்காலமும் நிலைத்திருக்க சி கார மந்திரத்தை ஜெபித்து உய்வுபெறலாம்.
 
அம்மையப்பரே! உங்களை நான் வணங்குகிறேன். என்னைப் பற்றி நிற்கின்ற ஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி, உமது அருளால் ஆட்கொண்டு அருளல்  வேண்டும் என்பதே பஞ்சாசரத்தின் பொருள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்