சிறுமி கற்பழிப்பு புகார்: முன்னாள் திமுக எம்.எல்.ஏவிற்கு 10 ஆண்டுகள் சிறை; நீதிமன்றம் அதிரடி

வெள்ளி, 28 டிசம்பர் 2018 (15:46 IST)
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த 15 வயது சிறுமியான சத்யா என்ற பெண் பெரம்பலூர் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து, வீட்டு வேலைகள் செய்து வந்தார். 
 
அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு திடீரென மர்மமான முறையில் இறந்து போனார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்தார். ஆனால் சிறுமி உடல்நலக் குறைவால் இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் சிறுமி கற்பழிக்கப்பட்டதால் தான் இறந்து போனதாக தெரியவந்தது.
 
இதையடுத்து இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார் ராஜ்குமார். இந்த வழக்கானது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் சிறுமியை கற்பழித்த முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்