வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால்? உயர்கல்வித்துறை உத்தரவு!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:41 IST)
வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உயர் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
வன்னியர்களுக்கு சமீபத்தில் வேலைவாய்ப்பு மற்றும் படிப்புகளுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது என்பதும் இந்த இட ஒதுக்கீடு குறித்த மசோதா சட்ட மன்றத்தில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் அதனை எம்பிசி மாணவர்களை கொண்டு நிரப்பலாம் என உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்