மத்திய ஆயுதபடை, சிறப்புப் பாதுகாப்பு படை, போதைப் பொருள் தடுப்புப்பிரிவு முதலிய பணிகளுக்கு மத்திய அரசு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அசாம் ரைபிள்படை, மத்திய ஆயுத காவல்படை, சிறப்புப் பாதுகாப்புப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முதலிய பணிகளுக்கு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம்.
தொடர்ந்து தகுதித் தேர்வுகளில் இந்தியைத் திணித்து, இந்தி அல்லாத மொழிகள் பேசும் மாநிலங்களிலுள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தடுக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. மொழி உரிமை என்பது இந்த நாட்டில் அனைவருக்கும் இருக்கிறது என்று ஒன்றிய அரசு உணரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.