வீடு அபகரிப்பு வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த குமார் வீடு அபகரிப்பு புகாரின் பேரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.