இந்த நிலையில்,  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளன.
	 
	காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி  உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
	 
	இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததுடன் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
	மேலும், அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனம் இருக்கிறது ; மார்க்கம் விரைவில் வரும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.