குடிபோதையில் டாக்சி டிரைவரிடம் தகராறு செய்த இளம்பெண் : வைரல் வீடியோ

சனி, 23 ஜனவரி 2016 (11:39 IST)
இளம்பெண் ஒருவர் குடிபோதையில் ஒரு டாக்சி டிரைவரிடம் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
மியாமியில் ஒரு உபேர் டாக்சி டிரைவரிடம் ஒரு பெண், குடிபோதையில் தகராறு செய்கிறார்.  டிரைவரின் சட்டையை பிடித்துக் கொண்டு வெகுநேரம் நிற்கிறார். ஒரு கட்டத்தில், அந்த டிரைவர் கோபமடைந்து அவரை கீழே தள்ளிவிட்டு காரை கிளப்ப முயற்சிக்கும் போது, அவர் ஓடி வந்து காருக்குள் அமர்ந்து அவரை கண்டபடி திட்டுகிறார்.
 
அதன்பின் அந்த டிரைவர், போலிசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து விசாரணை செய்கிறார்கள். இவை எல்லாவற்றையும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் அஞ்சலி ராம்கிசூன் என்பது, அவர் நான்காம் வருட நரம்பியல் துறை மருத்துவ மாணவி எனபதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ காட்சியை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர். 

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

வெப்துனியாவைப் படிக்கவும்