உரிப்பு

திங்கள், 3 அக்டோபர் 2011 (12:56 IST)
இந்த நகரச்சுவர்கள்
நகராத பாம்புகள்.

அடிக்கடி வால்போஸ்டர் தோல்
வளர்ந்து தைத்து விட,
நள்ளிரவில்
அவசரமாய் சட்டையுரித்துப்
புதுத்தோலில் விடிந்து
பளபளக்கும் பட்டணத்துப் பாம்புகள்-
இந்த நகராத சுவர்கள்.

[நன்றி: "உதநிழல்" தொகுப்பு, 1970]

வெப்துனியாவைப் படிக்கவும்