செய்முறை:
மட்டன் நெஞ்சு எலும்பை நன்றாக கழுவி கொள்ளவேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, பெருஞ்சீரகத்தை(சோம்பு) ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காஉந்ததும் அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்சு எலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள் போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். உடலுக்கு வலு சேர்க்கும் மட்டன் நெஞ்சு எலும்பு சூப் தயார்.