சுவை மிகுந்த பிச்சி போட்ட கோழி வறுவல்!!

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - அரை  கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
தனியாத்தூள் - 2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 4   ஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:
 
சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். வெந்ததும் அதனை கைகளால் நன்கு உதிர்த்து (பிச்சி) போட்டு கொள்ளவும்.

அடுத்து கடாயில் எண்ணெய்யில் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 
அடுத்து மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகுத் தூள் சேர்த்து அதனுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன் சேர்த்து தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். இறுதியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான பிச்சி போட்ட சிக்கன் வறுவல் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்