தமிழகத்தின் சில பகுதிகளில், பருவநிலை மாற்றத்தால், இன்ஃப்ளூயன்சா எனப்படும் சுவாச மண்டல வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்ஃப்ளூயன்சா A (H1N1, H3N2) மற்றும் இன்ஃப்ளூயன்சா B போன்ற வைரஸ் வகைகளால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது.
அதிக உடல் வெப்பநிலையுடன், உடல் முழுவதும், குறிப்பாக தசைகள் மற்றும் தலையில் கடுமையான வலி இருக்கும். குளிர்வது போன்ற உணர்வும் ஏற்படலாம்.
குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால், அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், கட்டாயம் இன்ஃப்ளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும்.
நன்றாக ஓய்வெடுத்து, உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். திரவ உணவுகளையும், தண்ணீரையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.