காச நோய் ஊழியரின் கண்ணிர் கடிதம்....

திங்கள், 31 ஜூலை 2017 (17:09 IST)
மதிப்பிற்குரிய ஐயா, 
 
                நான் இந்த கடிதத்தை RNTCP ஊழியர்களின் சார்பாகவும் அவர்களது குடும்பத்தின் சார்பாகவும் இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் இருந்த கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். 

கடந்த 1997 ஆம் ஆண்டில் இருந்து Revised national tuberculosis control program (RNTCP) பல தொழில்நுட்ப மாற்றங்களையும் நிர்வாக மாற்றங்களையும் கண்டுள்ளது. ஆனால், ஊழியர்களின் நிலை 1997 ஆம் ஆண்டு இருந்த அதே நிலைதான் தொடர்கிறது. 
 
10 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்களாகவே பணியாற்றுகிறோம். ஒவ்வொரு வருடமும் எங்கள் ஒப்பந்தம் புதுபிக்கப்படுகிறது. எங்களது சம்பளத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. 
 
நவீன பாகுபாடு மற்றும் நவீன அடிமைத்தனத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், எங்களை பாருங்கள். நவீன அடிமைதனத்திற்கு நாங்களே உதாரணம். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்பும் போதும், பேசும் போதும் காற்றிம் மூலம் காச நோய் பரவுகிறது. 
 
நாங்கள் ஒரு நாளைக்கு காச நோய் தாக்கிய 100 நோயாளிகளை பார்க்க வேண்டியுள்ளது. இதனால் லட்ச கணக்கான காச நோய் பேக்டீரியாக்கள் எங்களை நேரடியாக தாக்குகிறது. காச நோயாளிகளுடன் பணியாற்றுவது அணுமின் நிலையத்தில் பணியாற்றுவதற்கு சமமானது. 
 
எல்லையை காக்கும் ராணுவ வீரர்களை போல காச நோய் நாட்டை தாக்காமல் நாங்கள் பாதுகாத்து வருகிறோம். ஆனால், எங்களது குடும்பம் ஏழ்மையான நிலையில்தான் உள்ளது. இது தொடர்ந்தால், பிற்காலங்களில் ஆயிரக்க கணக்கான RNTCP ஊழியர்கள் காச நோயால் பாதிக்கப்பட கூடும். எனவே, எங்களை காப்பாற்றுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
 
ஒரு ஆய்வின் படி, ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் இரண்டு காச நோயாளிகள் உயிரிழக்கின்றனர். பின் வரும் நாட்களில், தினமும் ஒரு ஊழியர் காசநோயால் அல்லது பொருளாதார நிலையினால் உயிரிழக்ககூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்