விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது கோவில்களில் வழக்கமாக உள்ளது. ஒரு முறை பண்டாசுரனுடன் , பார்வதி தேவி போர் புரிந்தார். பலமுறை போரிட்டும், பார்வதி தேவியால், பண்டாசுரனுனை அழிக்க முடியவில்லை.
இதையடுத்து பார்வதி தேவி, சிவபெருமானை வேண்டினார். அப்போது சிவபெருமான், விஜயதசமியில் போரிடும்படி கூறினார். அதன்படி பார்வதியும், விஜயதசமி தினம் ஒன்றில் பண்டாசுரனுடன் போரிட்டார். அப்போது போரில் தொல்வியுற்ற பண்டாசுரன், வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான்.
இதனை பார்த்ததும் பார்வதிதேவி, வன்னி மரத்தை வெட்டி, அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கப்படலாயிற்று. பண்டாசுரனை அழித்த மாலை வேலையில், இதனை நினைவு கூறும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.