ஈஸ்ட் ஒரு நுண்ணுயிர். பிரட், பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுவகைகளை செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு வகைகள் மட்டுமன்றி, சரும மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் ஈஸ்ட் நல்ல பலன்களை தருகின்றது.
வழிமுறை 1: தேவையானவை: முட்டையின் மஞ்சள் கரு - 2, ஈஸ்ட் - 1 ஸ்பூன், தேன் - 1 டேபிள் ஸ்பூன். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேன், ஈஸ்ட் போன்ற்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
வழிமுறை 2: ஈஸ்ட் - 1 டீஸ்பூன், கற்றாழை - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன். மேலே சொன்ன 3 பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள். இதனை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியி அலச வேண்டும். வாரம் ஒருமுறை செய்தால் நல்ல நீளமான கூந்தலை பெறலாம்.