கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை இரு முக்கியமான வகைகளாகும். ஆனால், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன.
கோதுமையை பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள், பொரித்த உணவுகள், கேக்குகள், பிஸ்கெட்டுகள் என்று ஏராளமானவை செய்யப்படுகிறது. கலோரிகளை பொறுத்தவரை அரிசியில் உள்ள அதே அளவுதான் கோதுமையிலும் உள்ளது.
கோதுமையில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜெரோட்மின், தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் ஆசிட், காப்பர், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம், சல்ஃபர், குரோமியம் போன்றவை உள்ளது.
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் இடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.