முதலில் உடல் தன் கழிவுகளையும், விஷக்கூறுகளையும், நோய் காரணிகளையும் வெளியேற்ற உதவி செய்வது. உடலின் உயிராற்றலையும், இயக்க சக்தியையும் அதிகரிக்க செய்வது.
பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவங்களின் மூலமாக உடலின் கழிவு நீக்கத்துக்கும், நோய் குணப்படுத்தும் வேலைக்கும், உடலின் இயக்கத்துக்கும், உடலின் உயிராற்றலை அதிகரிப்பதற்கும் உதவி செய்வது.
உடலில் வாதம், பித்தம், மற்றும் கபத்தை சீர் செய்வது. பாதிக்கப்பட்டவருக்கு தனது ஆரோக்கியம் திரும்பும் என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் உருவாக்குவது.
நிலம், நீர்நிலைகள், மழை, காற்று, சூரியன், நிலா, போன்ற இயற்கை ஆற்றல்களை கிரகிப்பது. உடலின் தசைகள் மற்றும் செல்களில் படிந்திருக்கும் கழிவுகளையும், விஷக்கூறுகளையும், நோய் காரணிகளையும் வெளியேற்றுவது ஆகியவையாகும்.