வெண்டைக்காயும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதில் உள்ள பெக்டின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, அதே போல் அதில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.
உடல் எடை உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற அதீத பசி உணர்வு தான். வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், இந்த அதீத பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும்.