இத்தனை அற்புத சத்துக்களை கொண்டதா கிவி பழம் !!

புதன், 13 ஜூலை 2022 (14:02 IST)
கிவி பழத்தில் வைட்டமின் “ஈ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.


கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண கிவி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். கிவி பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது.

கிவி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். நரம்புகளில் ரத்தம் கட்டி கொள்ளாமல் செய்கிற சக்தி கிவி பழத்திற்கு உண்டு. சர்க்கரை வியாதி பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் ஏற்படும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

கிவி பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் கிவி பழம் தடுக்கிறது. வயிறு நலம், செரிமான சக்தி கிவி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய அமிலச்சத்துகள் அதிகம் உள்ளன.

கிவி பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும். குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் கிவிபழம் பேருதவி புரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்