கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன...?

புதன், 13 ஜூலை 2022 (11:49 IST)
இன்றைய இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஒரு பிரச்சனை, பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) எனப்படும் ஹார்மோன் குறைபாடு. இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாயே ஏற்படாத சூழல் போன்றவையெல்லாம் இருக்கலாம்.


இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு கருப்பையில் பல நீர்க்கட்டிகள் காணப்படுகிறது. இது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஆண்களுக்கான ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியால் ஏற்படுகிறது.

தவிர்க்கவேண்டிய உணவுகள்:

கலோரி மற்றும் சர்க்கரைச்சத்து குறைவான உணவுகள், நார்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம்வரை நார்ச்சத்து உட்கொள்வது நல்லது.

நாம் சாப்பிடும் உணவில் பாதிக்குப் பாதி காய்கறிகளால் நிறைந்திருக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி மற்றும் மைதா, பிராய்லர் சிக்கன், மட்டன் போன்ற கொழுப்புச்சத்து மிகுந்த கறி வகைகள், நெய், ரசாயனம் சேர்த்த நொறுக்குத்தீனிகள், துரித உணவுகள், கோதுமை, சோயா பருப்பு.

அன்றாட உணவில், கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் கொண்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இப்படி செய்யும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். பொதுவாக, இன்சுலின் அளவு அதிகரிப்பது உடல் கொழுப்பு மற்றும் எடையை அதிகரிக்க செய்யும். கார்போஹைட்ரேட்ஸ் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் என்பதால்தான், அவற்றை குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் அதிகம் உள்ள உணவுகளில் பேஸ்ட்ரிகள், மிட்டாய்கள், துரித உணவுகள், மஃபின்கள் அடங்கும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்