ஏலக்காய் டீ செய்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா...!

சமையலில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது, இது உணவு பொருளுக்கு சுவையையும், மணத்தையும் தரக் கூடியது. இது உணவு பொருள்களில்  மட்டுமில்லாமல் தேநீர் தயாரிக்கவும் பயன்படுகிறது. ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, போன்றவை அதிக அளவில் உள்ளன.
மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ  தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
 
ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
 
உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் டீயை குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஒட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறையும். தலைவலி அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் தலைவலி விரைவில் குணமடையும்.
 
செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும்.
 
ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
 
விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி  வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
 
வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்